ரஜினி கட்சி தொடங்க தாமதம் ??? ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் இணைந்தனர்....

சனி, 31 அக்டோபர் 2020 (16:48 IST)
ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 50 பேர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். 

நடிகர் ரஜினிகாந்த் தனது ஆன்மிக அரசியல் வருகையை அறிவித்து மூன்று வருடங்கள் முடியப்போகிறது. சமீபத்தில் அவர் எழுதியதாக வெளியான கடிதம் வைரலானது.

பின் இதுகுறித்து விளக்கம் அளித்த  ரஜினி, அந்தக் கடித்தத்தைத் தான் எழுதவில்லை எனவும், ஆனால் அதிலுள்ளது உண்மை எனவும் அரசியல் கட்சி குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் கட்சியினர்  எப்போது ரஜினி கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்துள்ளsனர்.

இந்நிலையில், ரஜினி கட்சித் தொடங்க காலதாமதம் ஆவதால்  நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட இளைஞர் அணியைச் செயலாளர் முகமது ஷபிக் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்