ஒரே ஃபீலிங்கா இருக்குப்பா... சென்னை வந்து சேர்ந்த மணிமகேலையின் முதல் வீடியோ!

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (09:16 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுததால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் வருகிற மே 31ம் ஆம் தேதி வரை ஊரடங்கு     உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் வெளியூர் சென்ற சிலர் வீடு திரும்ப முடியாமல் முழித்துக்கொண்டிருந்தனர். அந்தவகையில் தொகுப்பாளினி மணிமேகலை வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார். இதனால் சென்னை திரும்ப முடியாமல் கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளார். அங்கிருந்த படியே கிராம குழந்தைகளுடன் விளையாடுவது , முறுக்கு சுடுவது உள்ளிட்ட பல வீடியோக்களை கடந்த 2 மாதங்களாக வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்றைய முன்தினம் சென்னை வந்து சேர்ந்த மணிமகேலை கிராமத்தில் அனைவருடனும் சேர்ந்து சாப்பிட வீடியோ ஒன்றை வெளியிட்டு " சென்னை வந்து சேர்ந்துவிட்டேன்.. உங்கள் அனைவரையும் ரொம்ப மிஸ் பண்ணுறேன். அடுத்த வருடம் மறுபடியும் வருகிறேன் என கூறி பதிவிட்டுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் இனி நாங்களும் அந்த கிராமத்தை மிஸ் பண்ணுவோம் என கூறி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Last dinner nyt, before we left That village

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்