ரசிகர்களின் கோரிக்கை ஏற்று அனிருத் பாடலை பாடிய பாவனா - வீடியோ!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (16:42 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஃபேமஸ் ஆனவர் விஜே பாவனா. இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது கேரியரை துவங்கினாலும் விஜய் தொலைக்காட்சி தான் இவரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது.

சிவகார்த்திகேயன் , மாகாபா ஆனந்த் போன்றவர்களுடன் இவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகள் படு ஃபேமஸ் ஆனது. மேலும் பரதநாட்டியம், டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பல கலைகளில் ஜொலித்து வரும் இவர் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட மாஸ்டர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழில் மட்டும் பாடுமாறு என்னைக் கேட்ட எல்லோருக்கும் அனிருத் இசையமைப்பில் உருவான 3 படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பானது. ஆனால், இந்த பாடலின் சரணம் ஸ்ருதி ஹாசனின் மேஜிக் குரல் ஆன்மாவைத் துளைத்து இதயத்தில் உள்ள இடைவெளிகளை இழுக்கிறது எனக்கூறி "கண் அழகா" பாடலை பாடியுள்ளார். இதோ பாவனா பாடிய வீடியோ. அவ்வப்போது அனிருத்தின் லேடி வெர்ஷன் என கூறி பாவனாவின் முக பாவனையை இணையவாசிகள் கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்