விண்ணைத் தாண்டி வருவாயா… கணேஷ் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகர்!

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (14:49 IST)
நடிகர் விடிவி கணேஷ் இப்போது தமிழ் சினிமாவின் முனன்ணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

கௌதம் மேனனின் உற்ற நண்பராக இருந்து வந்த விடிவி கணேஷ், அவர் படத்தின் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு நடிகராக பல வாய்ப்புகள் வந்தன. இடையில் சில படங்களை தயாரித்து கையை சுட்டுக்கொண்டார்.

இந்நிலையில் விடிவி கணேஷ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விவேக்தானாம். ஆனால் அது நடக்காமல் போகவே கணேஷ் நடித்தார் என்று இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்