புயலுக்கு கேதர் ஜாதவ்னு பேர் வெச்சிருந்தா…! என்ன வெச்சு செய்றீங்களே! – விவேக் கலகல ட்வீட்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (19:23 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் அதை தொடர்பு படுத்தி இணையத்தில் வைரலாகி வரும் மீம் குறித்து விவேக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வங்க கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள நிலையில் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக அரசும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் சமூக வலைதளங்கள் முழுவதும் நிவர் புயல் குறித்த பேச்சாகவே உள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் கேதர் ஜாதவ் சிறப்பாக விளையாடாதது அப்போதே பெருவாரியாக மீம் க்ரியேட்டர்களால் கலாய்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள நிவர் புயல் குறித்து சமூக வலைதளத்தில் “நிவர்னு பேர் வெச்சதுக்கு பதிலா கேதர் ஜாதவ்னு வெச்சிருந்தா அடிக்காமலே போயிருக்கும்.. ஐடியா இல்லாத பசங்க” என்று ரன் பட விவேக் மீமுடன் இணைத்து பதிவிட்டுள்ளனர்.

இந்த மீமை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விவேக் “எப்பவோ நடிச்ச ஒரு காமெடி சீனின் ஒரு படத்த வச்சி இப்டி பின்ரீங்களேப்பா!! ஐடியா உள்ள பசங்க!!” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்