மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை: நடிகர் விவேக் கவிதை

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (08:31 IST)
சென்னைக்கு சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்தது. அவ்வாறு சென்னைக்கு வந்தவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கொடுத்து, நல்ல வருமானத்தையும் கொடுத்து, வந்தாரை வாழவைக்கும் நகரமாக சென்னை இதுவரை இருந்தது 
 
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்  நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. சென்னையில் இருந்து வெளியேறினால் உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் பலர் சென்னையை காலி செய்துவிட்டு குடும்பத்தோடு மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊரை நோக்கி செல்கின்றனர் 
 
லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியவர் கூட பத்தாயிரம் ரூபாய் வருமானம் வந்தால் போதும் சொந்த ஊர் சென்று உயிரோடு பிழைத்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை குறித்து நடிகர் விவேக் கவிதை வடிவில் ஒரு டுவிட்டை பதிவு செய்து உள்ளார் அவர் அதில் கூறி இருப்பதாவது:
 
எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள். பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி, இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை. அது மீளும்; வாழும்! என்று நடிகர் விவேக் பதிவு செய்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்