விரைவில் தொடங்க இருக்கும் இன்று நேற்று நாளை 2!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (07:55 IST)
2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இன்று நேற்று நாளை படத்தின் அடுத்த பாகம் விரைவில் தொடங்க உள்ளது.

ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் மற்றும் மியார் ஜார்ஜ் நடிப்பில் உருவான திரைப்படம் இன்று நேற்று நாளை. தமிழில் அதிகம் வராத டைம் டிராவல் வகையில் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் அந்த படத்தின் பார்ட் 2 எடுக்க விரும்பிய தயாரிப்பாளர் சி வி குமார் இயக்குனர் ரவிக்குமாரை கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள சொன்னார். அவரின் இணை இயக்குனர் எஸ் பி கார்த்திக் அந்த படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் பூஜை போடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அதற்குக் காரணம் என்ன என்றால் படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்துகொண்டிருந்தார்.

இப்போது அவர் படங்களை கிட்டத்தட்ட முடித்துவிட்ட நிலையில் விரைவில் இன்று நேற்று நாளை படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்