நீலம் நிறுவனத்தின் பெயரையும் அதன் அமைப்புகளையும் பயன்படுத்தி, சில அங்கீகாரம் இல்லாத நபர்கள் பொய்யான ஆடிஷன் அறிவிப்புகளை வெளியிட்டு பணம் பறிக்க முயல்வது கவனத்திற்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, நடிக்கும் வாய்ப்பு தேடும் கலைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் குறித்து உடனடியாகப் புகாரளிக்குமாறும் நீலம் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.