இரண்டாம் பாகமும் இருக்கு... 'மோகன்தாஸ்' படத்தின் சுவாரஸ்யத்தை சொன்ன விஷ்ணு விஷால்!

Webdunia
சனி, 16 மே 2020 (10:42 IST)
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், நேற்று இன்று நாளை , ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கதாநாயகர்கள் லிஸ்டில் இடம்பிடித்தார்.

இதையடுத்து தற்போது FIR என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதற்குள்ளாகவே தனது அடுத்த படத்திற்கான வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துவிட்டார். ஆம், விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கும் "மோகன்தாஸ்" படத்தின் டைட்டில் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களை குவிந்தது. சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால் தனது சினிமா பயணம் குறித்த ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மோகன்தாஸ் படம் பற்றி பேசிய விஷ்ணு விஷால், அந்த படம் இரண்டாம் பாகங்களாக எடுக்கும் திட்டமும் உள்ளதாக கூறியுள்ளார். படத்தின் படப்பிடிப்பே துவங்காத நிலையில் அதற்குள் இரண்டாம் பாகம் குறித்து கூறியிருப்பது கொஞ்சம் ஓவராக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் முணு முணுக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்