நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் பிறந்த நாளன்று வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதும் உண்டு
இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜுவாலா கட்டாவுக்கு மோதிரம் மாற்றிய புகைப்படங்கள் சமூகம் வைரலாகி வருகிறது. இன்று ஜூவாலாவின் பிறந்தநாளை அடுத்து அவருக்கு பிறந்த நாள் பரிசாக விஷ்ணு விஷால் இந்த மோதிரத்தை பரிசாக அணிவித்ததாக அவரே டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் இன்று முதல் தங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை தொடங்குவதாக விஷ்ணு விஷால் பதிவு செய்துள்ளதால் இது நிச்சயதார்த்த மோதிரமாகவே கருதப்படுகிறது
எனவே விரைவில் விஷ்ணுவிஷால்-ஜூவால் கட்டாவின் திருமண தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் தற்போது காடன், ஆரண்யா, ஜகஜ்ஜால கில்லாடி, எப்ஃ.ஐ.ஆர் மற்றும் மோகன் தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது