லியோவில் என்னை விஜய்க்கு தம்பியாக நடிக்க அழைத்தார் லோகேஷ்… விஷால் பகிர்ந்த சீக்ரெட்!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (07:21 IST)
தமிழில் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம் மூலமாக இவர் உருவாக்கியுள்ள லோக்கிவெர்ஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் அக்டோபர் 19 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு விரைவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த படத்தில் அர்ஜுன் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இப்போது அதுபற்றி பேசியுள்ள விஷால் “படத்தில் விஜய்யின் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க என்னை லோகேஷ் அழைத்தார். என்னால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்