ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸான ‘வார் 2’ திரைப்படம்!

vinoth

வியாழன், 9 அக்டோபர் 2025 (09:19 IST)
இந்திய சினிமாவில் ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் பாணியில் படம் எடுக்கும் நிறுவனம் ‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’. அந்த நிறுவனம் வரிசையாக சாகச துப்பறியும் ஜேம்ஸ் பாண்ட் வகையிலான படங்களைத் தயாரித்து வருகிறது. அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸாகி வெற்றி பெற்ற வார் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். படம் பயங்கர பில்டப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸானது. ஆனால் முதல் காட்சியில் இருந்தே நெகட்டிவ் விமர்சனங்கள் குவியத் தொடங்கின. அது வசூலில் பிரதிபலித்தது.

ஆனால் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றதையடுத்து வசூலில் வீழ்ச்சியை சந்தித்தது. தெலுங்கில் மட்டுமே 50 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் தற்போது ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்