விஷாலின் “கத்தி சண்டை” 1500 அரங்குகளில் வெளியாகிறது!!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (17:46 IST)
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, ஜெகபதிபாபு, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கத்தி சண்டை'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபாலின் மெட்ராஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. கேமியோ பிலிம்ஸ் படத்தை வெளியிடுகிறது.


 
 
இந்தப் படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. மேலும் கேரளாவிலும் அதிக அரங்குகளில் தமிழிலேயே வெளியாகிறது. தமிழகம், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் மட்டும் இந்தப் படம் 1500 அரங்குகளில் வெளியாவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நூற்றுக்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது.  முழு நேரம்காமெடியனாக வடிவேலுவின் மறுவரவு இந்தப் படத்திற்கு மூலு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்