கத்திச் சண்டை படத்தில் நடிப்பதற்கு காரணம் கூறும் வடிவேலு!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (14:42 IST)
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, ஜெகபதிபாபு, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கத்தி சண்டை'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார்.


 
 
இப்படத்தில் நடிகர் வடிவேலு, முழுநேர காமெடியனாக நடித்துள்ளார். படத்தில் வித்தியாசமாக விக் வைத்துக் கொண்டு வரும் வடிவேலுவை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் படம் குறித்து வடிவேலு கூறுகையில்,
 
சில பெரிய படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை எல்லாம் ஏற்க மறுத்துவிட்டு விஷாலின் கத்திச் சண்டையில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என கேட்ட கேள்விக்கு, விஷால் மீது எனக்கு தனிப்பட்ட பாசம் உள்ளதால் இந்த படத்தில் நடிக்கவில்லை. நிறைய ஸ்டார்கள் உள்ள படங்களில் நடிப்பதை விட, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன். இதனால்தான் ரஜினி சாரின் லிங்கா படத்தில் நடிக்க மறுத்தேன் எனக் கூறினார்.
 
அடுத்த கட்டுரையில்