விஷாலின் ''லத்தி'' பட டிரைலர் ரிலீஸ்.... இணையதளத்தில் வைரல்

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (19:34 IST)
விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.


விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படத்தின் டிரைலர் வரும் 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தில், கான்ஸ்டபில் முருகானந்தம் ஆக,  லத்தி சார்ஜ் ஸ்பெஷலிஸ்ட்  ஆக நடித்துள்ள விஷால், அதிரடி காட்சிகளில் ஆக்சனில் அசத்தியுள்ளார். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையாகவும் நடித்துள்ளார். இவருடன் பிரபு , இயக்குனர் ஏ வெங்கடேஷும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர்  லைராகி வருகிறது.

 
Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்