கேரளாவில் கட்டா குஸ்தி படத்துக்கு நேர்ந்த சோகம்!

சனி, 10 டிசம்பர் 2022 (16:51 IST)
கட்டா குஸ்தி திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் கேரளாவில் சுத்தமாக படம் எடுபடவில்லையாம்.

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி என்ற திரைப்படம் கடந்தவாரம் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரிலீஸான இந்த படம் அதன் பின்னர் பார்வைகளைக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள விஷ்ணு விஷால் இந்த படத்தின் வியாபாரம் 30 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

ஆனால் கேரளாவில் மட்டும் படம் சுத்தமாக வரவேற்பைப் பெறவில்லையாம். இத்தனைக்கும் படத்தில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி கேரளாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்