விஷாலின் அயோக்யா இன்று ரிலீஸ் இல்லை: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (06:36 IST)
விஷாலின் அயோக்யா திரைப்படம் இன்று வெளியாகும் என்று விஷாலின் ரசிகர்கள் திரையரங்கின் முன் குவிந்துள்ள நிலையில் சற்றுமுன் இந்த படம் இன்று ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இன்று காலை அயோக்யா திரைப்படத்தின் முதல் காட்சி என்பதால் ரசிகர்கள் திரையரங்கின் முன் பேனர், கட் அவுட் ஆகியவை தயார் செய்து முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆவலுடன் இருந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் இன்று இல்லை என பி.ஆர்.ஓ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் 'அயோக்யா' ரிலீசுக்காக அனைத்து முயற்சிகளும் எடுத்துவிட்டேன், ஆனால் முடியவில்லை. எனக்கு என ஒரு நாள் வரும், அதுவரை என் பயணத்தை தொடர்வேன்' என்று கூறியுள்ளார்.

இன்று 'அயோக்யா' திரைப்படம் ரிலீஸ் இல்லை என்பதால் முன்பதிவு செய்யப்பட்டதற்கான பணம், அவரவர் வங்கி கணக்கில் திருப்பி அனுப்பப்படும் என திரையரங்கு தரப்பினர் தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்தின் தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் நீதிமன்றம் சென்றுள்ள நிலையில் அவருடைய படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்