சிம்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: விஷால் பதில்...

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (17:58 IST)
நடிகர் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் காலீஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கீ. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கீ படக்குழுவினர் விஷால், விஜய் சேதுபதி, மைக்கேல் ராயப்பன், பி.எல்.தேனப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 
நிகழ்ச்சியின் போது, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது கொடுத்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டார். இதற்கு விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், நடவடிக்கை எடுத்தோம். ஆனால் சிம்பு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே இந்த பிரச்சனையை எப்படி முடிப்பது என தெரியவில்லை என கூறினார்.
 
மேலும், மைக்கலே் ராயப்பன் தயாரிப்பில், பணம் வாங்காமல் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். அந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில், அவரிடம் சம்பளம் பெற்று கொள்கிறேன் என்றும் விஷால் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்