விருமன் இயக்குனருக்கு வந்த சிக்கல்… தொடங்கியது அடுத்த கதை திருட்டு சர்ச்சை!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (12:23 IST)
விருமன் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் திரை எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்றில் நாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு ’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரே வீச்சாக நடந்து முடிந்துள்ளது.

விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் திரை எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்