டிசம்பருக்குள் முடிகிறது கார்த்தியின் விருமன்!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (11:37 IST)
கார்த்தி நடிப்பில் உருவாகும் விருமன் திரைப்படம் இப்போது முழுவீச்சில் படமாக்கப்பட்டு வருகிறது.

சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்றில் நாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு ’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்தமாதமே தொடங்கி நடந்து வருகிறது.

முதலில் கார்த்தி இல்லாத காட்சிகளை படமாக்கி முடித்த படக்குழு, இப்போது கார்த்தி சம்மந்தப்பட்ட காட்சிகளை முழுவீச்சாக படமாக்கி வருகிறது. டிசம்பர மாதத்துக்குள் மொத்த காட்சிகளையும் படமாக்கி முடித்துவிடவேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்