பா.ரஞ்சித்- படத் தலைப்பை விட்டுக்கொடுத்தார்- - சூர்யா புகழாரம்

வியாழன், 28 அக்டோபர் 2021 (18:41 IST)
தனது நடிப்பில் வெளியாகவுள்ள  ஜெய்பீம் என்ற படத்தின் டைட்டில் குறித்து சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் வரும் நவம்பர் 2ம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது

இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி விட்டது என்பதும் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் வசன காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று ஜெய்பீம் படத்தின் தலைப்பு குறித்து தெரிவித்துள்ளதாவது:

ஜெய்பீம் என்ற தலைப்பின் உரிமையை முதலில் பா.ரஞ்சித் தான் வைத்திருந்தார்.  நான் அவரிடம் என்று கேட்டபோது, ஜெய்பீம் எல்லோருக்கும் சொந்தமானது. அதனால் எடுத்துக்கொள்ளுங்கள் எனப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தார் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்