சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பாகுபலி நாயகன் புகைப்படம்

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (11:28 IST)
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ.1,700 கோடிக்கும் மேல்  வசூல் செய்தது. பாகுபலி 2 படத்தை முடித்த பிறகு பிரபாஸ் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளது.

 
இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றதையடுத்து நடிகர் நடிகைகள் அனைவரும்  புகழின் உச்சத்தில் உள்ளனர். பாகுபலி 2 வெற்றிக்கு பிறகு பிரபாஸ் உலகம் முழுவதும் அறிந்த பிரபலமாகிவிட்டார். ஒரு படத்திற்காக 5 வருடம் என எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் நடித்துக்கொடுத்தார். இந்நிலையில் இவர் அடுத்து நடிக்கும்  சாஹோ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார்.

 
தற்போது பிரபாஸின் ஆதர் கார்ட் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகின்றது. இது உண்மையாகவே பிரபாஸ் ஆதார் கார்ட் தானா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை பார்க்கும் நமக்கும் ஒரு சந்தேகம் வரத்தான் செய்கிறது.
அடுத்த கட்டுரையில்