மும்பையில் கஜோலுடன் தனுஷ் செய்த வேலையை பார்த்திங்களா?

Webdunia
ஞாயிறு, 21 மே 2017 (23:13 IST)
தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விஐபி 2'. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷனுக்காக ஒரு மியூசிக் வீடியோ ஒன்று மும்பையில் தயாரிக்கப்பட்டுள்ளது.



 


இந்த வீடியோவில் தனுஷ் மற்றும் கஜோல் நடிக்க அதை செளந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார். இந்த தகவலை செளந்தர்யா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். ஒருநிமிடம் ஓடும் இந்த மியூசிக் வீடியோ விரைவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.  சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்