குட் பேட் அக்லி படத்தில் அந்த சூப்பர்ஹிட் விண்டேஜ் பாட்டு… ஆனா அஜித்துக்கு இல்லையாம்!

vinoth

திங்கள், 3 மார்ச் 2025 (11:25 IST)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. அஜித் மூன்று விதமான கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் ரிலீஸானது. வேகமாக ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பன்ச் வசனங்களை அடக்கி  படத்தொகுப்பு செய்யபப்ட்ட இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை கிட்டட்தட்ட 4 கோடி பேரால் பார்க்கபப்ட்டுள்ளது.

தற்போது வெளியாகும் படங்களில் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்துவது ஒரு ட்ரண்ட்டாக உள்ளது. அந்த வகையில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் 90 களில் வந்த ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலைப் பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாடலுக்கு அர்ஜுன் தாஸ் மற்றும் பிரியா வாரியர் ஆகியோர்  நடனம் ஆடியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்