பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் கடந்த மாதம் 21 ஆம் தேதி ரிலீஸாகி பெருவாரியான வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஓடிவரும் டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு, நூறு கோடி ரூபாய் வசூல் கொடுத்த ஹீரோ என்ற பெருமையை இளம் வயதிலேயே ப்ரதீப் பெற்றுள்ளார்.