மின்னல் வேகத்தில் முடிந்த விமலின் ‘தேசிங்கு ராஜா’ பட ஷூட்டிங்!

vinoth

வியாழன், 27 ஜூன் 2024 (07:50 IST)
விஜய் நடித்த  “துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திக்கேயன் நடித்த  “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம்ரவி நடித்த “தீபாவளி”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை டைரக்ட் செய்தவர் s.எழில்.

காதல் படங்கள் எடுத்து வந்த அவர் மனம் கொத்திப் பறவை படத்துக்குப் பிறகு தன்னுடைய ரூட்டை காமெடிக்கு மாற்றிக் கொண்டார். அப்படி அவர் இயக்கிய காமெடி சூப்பர் ஹிட் திரைப்படம்தான் தேசிங்கு ராஜா. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு  தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

 இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்