‘விலங்கு’ வெப் சீரிஸ் வெற்றி… இயக்குனருக்கு டோலிவுட் நடிகரிடம் இருந்து வந்த அழைப்பு!

புதன், 27 ஜூலை 2022 (09:31 IST)
ஜி 5 தளத்தில் வெளியான விலங்கு என்ற வெப் சீரிஸ் பெரும் வெற்றி பெற்ற ஒரு தமிழ் சீரிஸாக அமைந்தது.

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது.

இந்நிலையில் அவர் நடித்துள்ள விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை புரூஸ் லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார். இந்த வெப் தொடர் நீண்ட நாட்களுக்குப் பிறகு விமலுக்கு ஒரு கம்பேக்காக அமைந்துள்ளது.

அதே போல அந்த சீரிஸின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜுக்கும் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அவரை அல்லு அர்ஜுன் தன்னுடைய நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க அழைப்பு விடுத்துள்ளாராம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்