இந்தி ‘விக்ரம் வேதா’ பற்றி முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஹ்ருத்திக் ரோஷன்… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (15:26 IST)
விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கை புஷ்கர்- காயத்ரி ஆகியோர் இயக்கி வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக பல கட்டமாக நடந்த படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் அறிவித்துள்ளார். மேலும் இயக்குனர்களோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர அது இப்போது வைரலாகி வருகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்