குத்தாட்டம் போடும் விக்ரம்!!

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (11:28 IST)
தான் நடித்துவரும் ‘ஸ்கெட்ச்’ படத்துக்காக, சூப்பரான குத்துப்பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட இருக்கிறார் விக்ரம்.


 
 
‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘ஸ்கெட்ச்’. அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்காவும், காமெடியனாக சூரியும் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தில், பைக் திருடனாக நடிக்கிறார் விக்ரம். அவரை விரட்டி விரட்டிக் காதலிப்பவராகத் தமன்னா நடித்துள்ளார். இருவர் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை, பாண்டிச்சேரியில் படமாக்கினார்கள். தொடர்ந்து, சென்னை பின்னி மில்லில் விக்ரம் ஆடும் ஒரு குத்துப்பாடலைப் படமாக்க இருக்கிறார்கள். ‘ஜெமினி’ படத்தில் இடம்பெற்ற ‘ஓ போடு…’ பாடலுக்கு நிகராக இந்தக் குத்துப்பாட்டு இருக்கும் என்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்