புஷ்பா புருஷனுக்கு கிடைத்துள்ள புதிய பட்ட பெயர்!!

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (10:49 IST)
காமெடி நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவில் உள்ள டாப் காமெடியன். சந்தானம் ஹீரோவாக மட்டும் நடிப்புது சூரிக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.


 
 
சூரி அனைத்து முன்னணி நடிகர்களுடனும், வளர்ந்து வரும் நடிகர்களுடனும் நடித்து விட்டார். ஆனால், சூரியை சினிமாவில் அடையாளம் காட்டியது வெண்ணில கபடிக்குழு படத்தில் அவர் செய்த பரோட்டா காமெடி காட்சி தான். அன்று முதல் அவர் பரோட்டோ சூரி என்றே அழைக்கப்பட்டு வந்தார்.
 
இதற்கு அடுத்து வேலைன்னு வந்துட்டா வெள்ளகாரன் படத்தில் புஷ்பா புருஷன் என்ற பெயரில் அவர் நடித்தது பெரிதாய் பேசப்பட்டது. பலரும் அவரை புஷ்பா புருஷன் என்றே அழைக்க துவங்கினர்.
 
தற்போது அவர் காமெடியில் கலக்கி வெளியாகியுள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் வாசிங் மிஷின் காமெடி நன்கு ஒர்க்கவுட் ஆகியுள்ளது.
 
அதனால் இதை அடைமொழியாய் பயன்படுத்தி சூரியை அழைக்க துவங்கியுள்ளனர். இது போன்ற சம்பவம் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் சக்சஸ் மீட்டில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்