பா.ரஞ்சித் தயாரிப்பில் விக்ரம் மகன் ஹீரோ.. இயக்குநர் ’’இவர் தான்’’ !!!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (17:53 IST)
’’பரியேறும் பெருமாள்’’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து இயக்கியுள்ள படம் கர்ணன்.

இப்படமும் வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ள நிலையில், அடுத்து விக்ரமிம் மகன் துருவ் விக்ரமை வைத்து விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தை வெளியிட்டவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ரிமேக் படம் வர்மா. இதில் அவரது திறமை பளிச்சிட்டது. பலரும் அவரது நடிப்பைப் பாராட்டினார்கள்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராக் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

அதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில்  துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு படம் உருவாகவுள்ளதாகவும் இப்படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கவுள்லதாகவும் தெரிகிறது.

இந்தச் செய்தி விக்ரம் மற்றும் துருவ்விக்ரம் ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்