துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் பிரச்சனைகள்.. கண்டுகொள்ளாத விக்ரம்!

வியாழன், 30 நவம்பர் 2023 (07:38 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து நவம்பர் 24 (நேற்று) ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக என்டர்டைன்மென்ட்’ நிறுவனம் கடைசி நேரத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரிலீஸ் ஆகாது என அறிவித்தது. இதற்குக் காரணம் ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் படத்தின் தயாரிப்பாளர் கௌதம் மேனன் வாங்கி இருந்த கடனைக் கட்டாததுதான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது கடனைக் கட்டிவிட்டு படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் கௌதம் மேனன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதுவும் உறுதி இல்லை என்றுதான் இப்போதுவரை பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸை ஒட்டி இவ்வளவு பிரச்சனைகள் நடந்தாலும், அது சம்மந்தமாக அந்த படத்தின் கதாநாயகன் விக்ரம் முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் அவர் இந்தியாவிலேயே இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்