இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக என்டர்டைன்மென்ட் நிறுவனம் கடைசி நேரத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரிலீஸ் ஆகாது என அறிவித்தது. இதற்குக் காரணம் ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் படத்தின் தயாரிப்பாளர் கௌதம் மேனன் வாங்கி இருந்த கடனைக் கட்டாததுதான் என்று சொல்லப்படுகிறது.
இது சம்மந்தமாக விஜய் ராகவேந்திரா என்பவர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் பதிலளித்துள்ள இயக்குனர் கௌதம்மேனன் “நவம்பர் 29 ஆம் தேதிக்குள் இந்த பணத்தை நீதிமன்றத்தில் கட்டிவிட்டு அதன் பின்னர்தான் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்வோம்” என உத்தரவாதம் அளித்துள்ளார். அதனால் இந்த படம் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.