இயக்குனருக்கு விலையுயர்ந்த கார்... இவர்களுக்கு 13 பைக்குகள்… கமல் கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்!

புதன், 8 ஜூன் 2022 (09:37 IST)
நடிகர் மற்றும் விக்ரம் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் படத்தில் பணியாற்றிய 13 பேருக்கு இருசக்கர வாகனங்களைப் பரிசளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பதக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் உலகளவில் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் திரைப்படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் விக்ரம் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த வெற்றியை அடுத்து நடிகர் கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு Lexus கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் கார் பரிசளித்தது போல உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு இரு சக்கர வாகனங்களை பரிசாக அளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்