விக்ரம்" படத்தில் சூர்யா காட்சியின்போது தீப்பிடித்த திரை: அலறியடித்து ஓடிய ரசிகர்கள்

புதன், 8 ஜூன் 2022 (07:37 IST)
விக்ரம்" படத்தில் சூர்யா காட்சியின்போது தீப்பிடித்த திரை: அலறியடித்து ஓடிய ரசிகர்கள்
புதுச்சேரியில் விக்ரம் திரைப்படம் திரையில் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென தீ பிடித்ததால் ரசிகர்கள் தியேட்டரில் இருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புதுவையில் உள்ள ஒரு திரையரங்கில் நேற்று விக்ரம் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த போது சூர்யா வரும் காட்சியின் போது திடீரென திரை தீப்பிடித்தது
 
இதனை அடுத்து ரசிகர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் திரையரங்குக்கு வருவதற்கு முன்பே திரை முழுவதுமாக எரிந்து சாம்பலாகி விட்டது
 
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்