5 நாட்களில் ரூ.200 கோடி வசூல்: விக்ரம் வசூலின் ஆச்சரியம்

செவ்வாய், 7 ஜூன் 2022 (21:41 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் இந்த படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் நேற்று மற்றும் இன்று இந்த படம் வசூல் செய்த தொகையை சேர்த்து 200 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே இப்படம் தான் மிகப்பெரிய வெற்றிப்படம் என்றும் வசூலிலும் சாதனை செய்து வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
மேலும் இந்த படத்தின் வசூல் தொடர்ந்து கொண்டிருப்பதால் 300 கோடியை நெருங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்