’சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு எப்போது? கமல்ஹாசன் தகவல்

செவ்வாய், 7 ஜூன் 2022 (19:26 IST)
’சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு எப்போது? கமல்ஹாசன் தகவல்
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவரது நடிப்பில் உருவாகி பாதியில் நின்று போன படங்கள் எல்லாம் தூசு தட்டப்பட்டு வருகின்றன. 
 
முதல் கட்டமாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அனேகமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அதேபோல் கடந்த ஆறு வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட சபாஷ் நாயுடு திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்த பின்னர் அடுத்தடுத்து நடந்த ஒரு சில சம்பவங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆறு ஆண்டுகளாக தொடர முடியாமல் உள்ளது என்பது குறிப்பிடதக்கது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்