மகேஷ்பாபு படத்தில் விக்ரம் நடிப்பது உண்மையா?

புதன், 23 பிப்ரவரி 2022 (15:34 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது
 
ஆனால் இந்த தகவலை விக்ரமின் மேனேஜர் மறுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார் 
 
எனவே பத்திரிகை மற்றும் ஊடகங்கள் இது மாதிரியான செய்திகளை வெளியிடும் முன் தங்களிடம் கலந்து ஆலோசித்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்