பிரபல ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரம்?

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (11:00 IST)
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி உள்ள சாமி 2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

 
இந்த படத்துக்கு பின் கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதைத் தவிர இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வாவின் பெயரிடப் படாத படத்திலும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் படமான 'டோன்ட் பிரீத்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்‌ஷரா ஹாஸன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்