சுதாரித்து கொண்ட ஓடிடி நிறுவனங்கள்.. இனிமேல் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு சிக்கல்?

Siva

வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (19:51 IST)
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வரும் "வேட்டம்" படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் நடிகர் தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கின்றனர். 
 
இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 60 கோடி என்று கூறப்படுகிறது. ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படமாக இது இருக்கும் என்பதால், அதிக செலவில் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அதே சமயம், தமிழ் சினிமாவில் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இதுவரை ஓடிடி நிறுவனங்கள் படங்களின் பட்ஜெட்டில் 60% வரை டிஜிட்டல் உரிமைகளுக்காக வழங்கின. ஆனால் இப்போது, பாக்ஸ் ஆபிஸ் வசூலின் அடிப்படையில் மட்டுமே டிஜிட்டல் உரிமைகளுக்கான தொகையை நிர்ணயிக்க தொடங்கியுள்ளன. 
 
இதனால், தயாரிப்பாளர்களுக்கு குறைந்த வருமானமே கிடைக்கும். இது, பெரிய பட்ஜெட் படங்களுக்கு பெரும் சவாலாக அமையும் என்றும், குறிப்பாக ஃபைனான்ஸ் வாங்கி படம் எடுப்பவர்கள் இனி படம் எடுப்பது கடினம் என்றும் கூறப்படுகிறது. 
 
ஓடிடி-யைத் தொடர்ந்து, சாட்டிலைட் சேனல்களும் இதே முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளன. இது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்