மிக பிரமாண்ட பட்ஜெட்டில், இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆடியோ வெளியீடு தேதிஜூலை 7 ஆம் தேதி அந்த விழா நடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், பொன்னியின் செல்வன் பட டீசர் உருவாக்கதிதில் படக்குழுவுக்கு திருப்தி இல்லை எனவும் அதனால், மற்றோரு டீசர் உருவாக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கிடையே ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்க சுற்றுப்பயணம் முடித்து வந்ததும், டீசர் வெளியீடு தேதியை வைக்கலாம் எனக் கூறப்படுகிறது.