“கமல் சார் மருதநாயகம் வாய்ப்பு கொடுத்தா…” இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில்!

புதன், 22 ஜூன் 2022 (18:50 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை கமல் படங்கள் செய்யாத வசூல் சாதனையைப் படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேவரைட் இயக்குனராகியுள்ளார் லோகேஷ்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் “கமல் மருதநாயம் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தால் என்ன சொல்வீர்கள்” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “கண்டிப்பாக மறுத்துவிடுவேன். ஏனென்றால் அது ஒரு மனிதனின் மிகப்பெரிய உழைப்பு. இப்போது நான் அந்த திரைக்கதையை கையில் எடுத்தாதான் இன்னும் 10 வருடம் கழித்து அதை இயக்கும் பக்குவத்தைப் பெறுவேன்” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்