ஒரே மாதத்தில் விக்ரம்முக்கு இரண்டு ரிலீஸ்களா? தூசு தட்டப்படும் துருவ நட்சத்திரம்!

vinoth

வெள்ளி, 24 ஜனவரி 2025 (07:02 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 24  ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை.

இப்போது வரை அந்த படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் அந்த படம் ரிலீஸாகாததால் சமூகவலைதளங்களில் ஒரு ட்ரோல் மெட்டீரியலாகவே மாறியுள்ளது. இந்த படத்தை விக்ரம் கூட கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் விஷால்- சுந்தர் சி காம்பினேஷனின் ‘மத கஜ ராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகி பட்டையக் கிளப்பியுள்ள நிலையில் துருவ நட்சத்திரம் படத்தையும் எப்படியாவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ‘மார்ச் 7’ ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மார்ச் 27 ஆம் தேதி விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ திரைப்படம் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்