விக்ரம், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்த வீர தீர சூரன்' என்ற படத்தின் இரண்டாம் பாகத்தை அருண்குமார் இயக்கி வந்த நிலையில் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் மார்ச் 27ஆம் தேதி வியாழக்கிழமை இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விக்ரம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சமீப காலமாக விக்ரமுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காத நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் நிச்சயம் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி பணமாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் அருண்குமார் இயக்கத்தில் உருவான சித்தா திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தொடர் வெற்றி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.