விஜய்-ன் ’’மாஸ்டர்’’ நிகழ்த்திய சாதனை….ரசிகர்கள் கொண்டாட்டம்

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (16:18 IST)
விஜய்யின் மாஸ்டர் படம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். இப்படத்தின் வெற்றி மற்றும் வசூல் சாதனை மீண்டும் திரையரங்கம் மக்களை செல்ல வைப்பதாக இருந்தது. அதேபோல் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.

இந்நிலையில், இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இந்தியில் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ரீமேக் செய்யவுள்ளார் எனத் தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தை சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா வாண்டன் என்ற பெயரில் ரீமேக் செய்தார். இது சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படம்  2021 ஆம் ஆண்டில் IMDB-ன் இந்தியாவில் மிகப் பிரபலமான படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மலையாளத்தில் வெளியான திரிஷ்யம்2, மற்றும் ஏஸ்பிரெண்ட் ஆகிய படங்களும் இந்த சாதனை படைத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்