தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் காலத்து நடிகர்கள் பலர் இருந்தாலும் அவர்களைத் தாண்டி 90 களில் இளம் நடிகர்களாக சினிமாவில் அறிமுகம் ஆகி விஜய், அஜித் இருவரும் வெற்றி பெற்றனர்.
தற்போது ரஜினி, கமல் ஆகிய சூப்பர் ஸ்டார்களுக்கு அடுத்து இக்காலத்தில் விஜய், அஜித் ஆகிய இரு நடிகர்களும் சூப்பர் ஸ்டார்களாக உள்ளனர்.
இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்தாலும் இவரது ரசிகர்கள் அப்படி எடுத்துக்கொள்வதில்லை. இது பல தருணங்களில் சமூக வலைதளங்களில் வெளிப்படும். அந்த வகையில் இன்றும் விஜய், அஜித் ஆகிய இரு நடிகர்களின் ரசிகர்களும் டுவிட்டரில் இருவருக்கும் எதிராக டுவீட்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஆரம்ப காலக் கட்டம் முதல், ரஜினி போன்று விஜய்யும் மாஸ் படங்களில் இமேஜிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பதாலும், அஜித் வித்தியாசமாக கதை அம்சமுள்ள கதைகளில் நடிப்பதாலும் இருவரின் பாதையும் வேறு.
இதனால் ரசிகர்கள் விஜய், அஜித் இருவரையும் ஒப்பீடு செய்யத் தேவையில்லை எனக் கூறி வருகின்றனர். அதேசமயம் இன்றைய தேதிக்கு விஜய் வசூல் சக்கரவர்த்தியாகவும். அவருக்குப் போட்டியாக அஜித் விளங்குவதும் அவர்களின் ஒவ்வொரு பட வெளியீட்டில் ரசிகர்கள் காட்டும் ஆர்வத்திலேயே தெரியும்.