சுஷாந்தின் இன்ஸ்பிரேஷன் தான் ராயப்பன் - அர்ச்சனா கல்பாத்தி சொன்ன சுவாரஸ்ய தகவல்!

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (10:03 IST)
விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான படம் பிகில். இந்த படத்தில் மைக்கேல் , ராயப்பன் என இரண்டு ரோல்களில் விஜய் நடித்திருந்தார். இந்நிலையில் தற்ப்போது ராயப்பன் கேரக்டர் குறித்து பிகில் படத்தின் தயாரிப்பளார் அர்ச்சனா கல்பாத்தி ஒரு சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார்.

முதலில் ராயப்பன் கேரக்டருக்கு சீனியர் நடிகர் யாரையேனும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், அது செட் ஆகவில்லை. அந்த நேரத்தில் தான் ப்ரீத்தி ஶ்ரீ என்ற ஒரு காஸ்மெட்டாலஜிஸ்ட் மும்பையில் இருந்து மைக்கேல் கேரக்டரை உருவாக்க வந்திருந்தார்.

அவர் தான் சுஷாந்தின்  `Chhichhore’ படத்தின் அப்பா, மகன் குறித்த கேரக்டரை விளக்கினார்.  உடனே, விஜய் சார்கிட்ட சொல்லி ராயப்பன் லுக் டெஸ்ட்டும் எடுத்தோம். அது வேற லெவலில் வந்தது. விஜய் சாருக்கு ரொம்ப பிடித்து போக படம் பார்த்து முடிச்சவுடனே இதை பற்றித்தான் பேசினார் என்று அர்ச்சனா கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்