விஜய் படத்தில் பாட்டு பாடும் சூப்பர் சிங்கர் பிரபலம்

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (08:25 IST)
தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே நயன்தாரா, பரியேறும் பெருமாள்' கதிர், விவேக் , யோகிபாபு , தீனா , ஆனந்த்பாபு , டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது விஜய் டிவி சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமான கப்பீஸ் பூவையர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 7 வயதே ஆன கப்பீஸ் பூவையர் இந்த படத்தில் நடிப்பதோடு ரஹ்மான் இசையில் ஒரு பாடலையும் பாடவிருக்கின்றாராம்

சிவகார்த்திகேயன், சந்தானம் முதல் செந்தில்-ராஜலட்சுமி வரை பலர் விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து பிரபலமாகி வரும் நிலையில் தற்போது கப்பீஸ் பூவையரும் விஜய் டிவிவியில் இருந்து திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். அதிலும் முதல் படமே விஜய் படம் என்பதால் கப்பீஸ் பூவையர் உலக அளவில் பிரபலமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்