வாரிசு பற்றி ட்வீட் போட்டாரா விஜய் மகன்?… இப்போது வெளியாகியுள்ள முக்கியத் தகவல்

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (08:52 IST)
வாரிசு பட லீக் காட்சிகளை யாரும் பரப்ப வேண்டாம் என விஜய்யின் மகன் சஞ்சய் பெயரில் ஒரு ட்வீட் வெளியாகி கவனம் ஈர்த்தது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் படப்பிடிப்பு தொடங்கியது முதலே அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ துணுக்குகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதைத் தடுப்பதற்காக இப்போது இயக்குனர் வம்சி படப்பிடிப்புத் தளத்துக்குள் யாருமே செல்போன் எடுத்து வரக்கூடாது என ஸ்ட்ரிட்க்காக தடை உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.

இந்நிலையில் லீக்கான காட்சிகளை யாரும் பரப்பவேண்டாம் என விஜய்யின் மகன் சஞ்சய் பெயரில் இருந்த ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் வெளியானது. ஆனால் இப்போது அது அவரின் உண்மையான அக்கவுண்ட் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பி ஆர் ஓ ரியாஸ் அகமது “சஞ்சய் எந்தவிதமான சோஷியல் மீடியாவிலும் இல்லை” என்றூ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்