எல்லா படத்துலயும் நடிச்சு ஓப்பனிங் போச்சே… வருத்தப்படும் விஜய் சேதுபதி!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (10:32 IST)
நடிகர் விஜய் சேதுபதி சமீபகாலமாக ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தான் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் மட்டும் இல்லாமல் கௌரவ வேடங்கள் வில்லன் என எந்த பட வாய்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொண்டு நடித்த அவர் சமீபகாலமாக ஹிட் படமே கொடுக்கவில்லை. இதனால் அவரது கேரியரில் ஒரு சறுக்கல் உருவாகியுள்ளது.

இதனால் அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக அவருக்கென்று ஒரு ஓப்பனிங் இல்லாமல் போய்விட்டதாம். தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய நடிகர்களுக்கு என்றே முதல் மூன்று நாட்களில் பிரம்மாண்டமான ஓபனிங் இருக்கிறது. அவர்கள் படங்கள் சுமாராக இருந்தாலும் முதல் மூன்று நாள் ஓப்பனிங்கால் மிகப்பெரிய தோல்வியில் இருந்து தப்பித்து விடுகிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி முன்ன்ணி நடிகராக இருந்தும் அவருக்கு இதுபோல ஓப்பனிங் இல்லை என்று இப்போதுதான் வருத்தப்பட ஆரம்பித்துள்ளாராம். இதனால் கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்